23 C
Malaysia
Sunday, February 16, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் மலேசியா கொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு

கொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு

பெய்ஜிங் – நாளை சனிக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சீனப் பெருநாள் சீனர்களுக்கு மிக முக்கியமான நாள் மட்டுமல்ல! வணிகங்களுக்கும் மிக முக்கியமான நாள். வணிகங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் விற்பனைகள் நடக்கும். தொடர்ச்சியாக வரும் விடுமுறைகளால், உணவகங்கள், சுற்றுலா மையங்கள் மக்களால் நிரம்பி வழியும்.

ஆனால், இந்த ஆண்டுக்கான சீனப் பெருநாள் சீனாவுக்கும் அதன் கோடிக்கணக்கான மக்களுக்கும் பெரும் தலையிடியாக உருவெடுத்திருக்கிறது. காரணம் கொரனா வைரஸ் கிருமி பரவி வருவதுதான்.

11 மில்லியன் மக்களைக் கொண்ட வுஹான் நகரே மூடப்பட்டுஅங்கிருந்து யாரும் வெளியேற முடியாது – நகருக்குள்ளும் யாரும் வரமுடியாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 7 மில்லியன் மக்களைக் கொண்ட வுஹானின் அண்டை நகரான ஹூவாங்காங் நகரும் இதே போன்ற பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, இன்று சீனா தனது முக்கிய சுற்றுலாத் தலங்களை மூடியுள்ளது. ஆலயங்கள், ஷங்காய் டிஸ்னிலேண்ட், மேக்டொனால்ட்ஸ் உணவகங்கள், சீனாவின் மிக முக்கிய சுற்றுலா மையமான சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றை மூடுவதற்கு சீனா இன்று நடவடிக்கை எடுத்தது.

ஷங்காய் டிஸ்னிலேண்ட் தினமும் 100,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடவசதிகள் கொண்டது. கடந்த ஆண்டு சீனப் பெருநாளின்போது சீனப் பெருநாளுக்கான முதல் நாளில் ஷங்காய் டிஸ்னிலேண்டுக்கான அனைத்து டிக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ஆனால், இந்த ஆண்டு அந்த மையம் மூடப்பட்டிருக்கும் என்பதால் எத்தகைய வணிக இழப்பு என்பதை ஓரளவுக்கு நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

சீனாவின் 5 நகர்களில் தங்களின் கடைகள் மூடப்படுகிறது என மேக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த முடிவுகள் காரணமாக, கோடிக்கணக்கான டாலர்கள் வணிக இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரனா வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. 800 பேர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

10 நகரங்களில் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பெருநாளை முன்னிட்டு கோடிணக்கணக்கான மக்கள் பொதுப் போக்குவரத்து மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...