26 C
Malaysia
Sunday, February 16, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் அரசியல் சீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

சீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

கோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியர்கள் அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கள் உடல்நிலையை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளுடன் உள்ள சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.

தற்போது, சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனாவைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார வசதிகளும் சிகிச்சைக்கு தயாராகி வருவதாக அவர் கூறினார்.

“சீனாவிலிருந்து 14 நாட்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு திரும்பியவர்கள், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற ஆரோக்கியமற்ற நோயின் அறிகுறிகளுடன் சுற்றுலாப் பயணிகள் தனியார் சுகாதார மையங்கள் அல்லது அரசாங்க மருந்துவமனைகளை உடனடியாக அணுக வேண்டும்”

“அனைத்து தனியார் சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்கள் கொரோனாவைரஸ் பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளன” என்று அவர் இன்று புதன்கிழமை டுவிட்டரில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...