24 C
Malaysia
Friday, February 28, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் அரசியல் “நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”

“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”

40 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலப் போராட்டம் நடத்தி வந்த புந்தோங் வட்டார மக்களுக்கு இன்று விடிவு காலம் பிறந்தது. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெம்பன் வட்டாரத்தில் வழங்கப்பட்டிருக்கும் சொந்த நிலப்பட்டாக்களுக்கு நில உரிமை வரி (பிரிமியம்) செலுத்துவதற்கான அறிவிக்கை (5A Notice) இன்று பேராக் மந்திரி பெசார் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 133 பேர்களுக்கு இந்த அறிவிக்கை வழங்கப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த நிலவரியை அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் 124 பேர்கள் நேரடியாக இந்த அறிவிக்கையைப் பெற்றுக் கொண்டனர். நிலப்பட்டா ஒதுக்கப்படும் மக்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.

புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த மக்களுக்கு சொந்த நிலப்பட்டா வழங்கப்பட, நீண்டகாலமாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த பேராக் மாநில மஇகாவினருக்கும், இன்று நிலப்பட்டா கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த குறிப்பாக முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர், மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோ, ஈப்போ பாராட் மஇகா தலைவர் எஸ்.ஜெயகோபி ஆகியோருக்கு நிலப்பட்டாக்கள் பெறும் மக்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நிலப்பட்டா பெறுபவர்களில் சிலரை, அவர்களுக்கான நில உரிமை வரி செலுத்துவதற்கான அறிவிக்கைக் கடிதம் கிடைத்ததும் அவர்களை ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் எஸ்.ஜெயகோபி நேரடியாக அழைத்துச் சென்று பெம்பன் நிலம் அமைந்துள்ள வட்டாரத்தை சுற்றிக் காண்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...