26 C
Malaysia
Sunday, February 16, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் அரசியல் “நெடுஞ்சாலை கட்டண குறைப்பு நிதி நிலைமையை பாதிக்காது!”- மகாதீர்

“நெடுஞ்சாலை கட்டண குறைப்பு நிதி நிலைமையை பாதிக்காது!”- மகாதீர்

கோலாலம்பூர்: பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் பிளாஸ் நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு,  நிதி நிலை மற்றும் வளங்களை பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

2038 முதல் 2058 வரை 20 ஆண்டு காலத்திற்கு நீட்டிப்பதும் நிறுவனத்திற்கு போதுமான வருவாயைப் பெற உதவும் என்றும் அவர் கூறினார்.

முக்கியமாக எதிர்காலத்தில் நெடுஞ்சாலைகளின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் இந்த கால நீட்டிப்பு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

விகிதங்களைக் குறைப்பது சேவைகளின் தரத்தையும் பாதிக்காது என்று அவர் கூறினார்.

“18 விழுக்காடு குறைப்பதன் மூலமும், 38 ஆண்டு காலம் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதும், பிளாஸ் நிறுவனம், பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு போதுமான நிதியைத் திரட்ட முடியும்”

இந்த ஆண்டு பிளாஸ் நெடுஞ்சாலை கட்டண விகிதம் 18 விழுக்காடு குறைக்கப்படும் என்றும், 2058-ஆம் ஆண்டு வரை இந்த நீட்டிப்பு காலம் இருக்கும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் நோக்கத்துடன் பிளாஸ் நெடுஞ்சாலைகளின் கட்டணம் குறைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...