29 C
Malaysia
Saturday, February 22, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் அரசியல் “பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது!”- நஜிப்

“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது!”- நஜிப்

கோலாலம்பூர்: 2014 மற்றும் 2015-க்கு இடையில் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டதாக டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவரது தனது சொந்த கணக்கிலிருந்து செலவழிப்பதாக கருதியதாக அவர் கூறினார்.

இருப்பினும், அவை எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி என்பது தமக்குத் தெரியாது என்று நஜிப் கூறினார்.

வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரத்திற்கு பதிலளித்த நஜிப்,  ஜூலை மாதத்தில் தனது கணக்கில் வரவு வைக்கப்பட்ட 27 மில்லியனையும், 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐந்து மில்லியனையும் செலவிட்டதாக ஒப்புக் கொண்டார்.

மற்றொரு கேள்வியில், நிக் பைசால் தனது கணக்கை நிர்வகித்து வந்ததால், 32 மில்லியன் ரிங்கிட் தனது கணக்கிற்கு மாற்றப்பட்டதை அவரிடம் கூறாதது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நஜிப் கூறினார். ஏனெனில், அக்கணக்கினை நிக் பைசால் கண்காணித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...