26 C
Malaysia
Sunday, February 16, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் மலேசியா “பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது!”- ஹாடி அவாங்

“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது!”- ஹாடி அவாங்

கோலாலம்பூர்: பிரதமரை மாற்றுவது பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல எளிதானது அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையிலான பிரதமர் பதவி பரிமாற்ற ஒப்பந்தம் இஸ்லாத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இன்னும் அது குறித்து ஆலோசிக்கலாம் என்று அவர் கூறினார்.

“பதவி விடுவதை நாங்கள் நியாயப்படுத்த முடியாது. இஸ்லாத்தில் அனைத்து ஒப்பந்தங்களும் இஸ்லாத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நாம் முஸ்லிம்கள்.”

“பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல நாட்டின் தலைமையை மாற்றுவதை நாம் கருத்தில் கொள்ள முடியாது. நாம் பேருந்து ஓட்டுனரை மாற்ற விரும்பினாலும், கோலாலம்பூருக்கு செல்ல விரும்பினால், கோலாலம்பூருக்கு அழைத்து செல்லும் ஓட்டுனர் இருக்க வேண்டும்.”

பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கப்படுவது மகாதீரின் முழுமையான உரிமை அல்ல என்று ஹாடி மேலும் கூறினார்.

“ஜனநாயகத்தில் பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, அதை மக்களிடம் விட்டு விடுங்கள்.”

“மக்கள் நம்பவில்லை என்றால் தேர்தல் நடக்கட்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.

மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான அதிகார பரிமாற்ற பிரச்சனை தொடர்ந்து சில நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள், குறிப்பாக ஜசெக மற்றும் பிகேஆர் தலைவர்கள் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...