26 C
Malaysia
Sunday, February 16, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் அரசியல் பிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்!- அன்வார்

பிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்!- அன்வார்

கோலாலம்பூர்: அதிகாரத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.

அவரது ஆதரவாளர்களுக்கும், பிரதமர் மகாதீர் முகமட் ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்ச் சண்டை ஏற்பட்டு வரும் நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரும் பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டாம் என்றும், 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை மதிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில், நம்பிக்கைக் கூட்டணி மகாதீரை பிரதமராக நியமிக்க ஒப்புக் கொண்டது. பின்னர் பிரதமர் பதவி அன்வாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அது முடிவு செய்திருந்தது.

இன்று புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், பிரதமருக்கு தாம் ஆதரவு அளிப்பதாக, குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் மகாதீருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...