26 C
Malaysia
Sunday, February 16, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home Uncategorized மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎம்எப்) அத்தனிநபரின் மீது நடத்திய சிகிச்சை மற்றும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் இந்த விஷயத்தை அவர் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, மலேசியாவில் கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  அவற்றில் மூன்று எதிர்மறையான முடிவுகளை வெளிபடுத்திய நிலையில், சபாவில் இந்த நபர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

அந்நபருக்கு கொரொனாவைரஸ் (என்சிஓவி) தொற்று அல்ல என்றும், மாறாக இன்ப்ளூயன்சா ‘ஏ’ காரணமாக அவர் இப்போது குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, நாட்டில் கொரொனாவைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பதிவுகள் குறித்து தேசிய நெருக்கடி மற்றும் அவசரகால பதிலளிப்பு மையம் (சிபிஆர்சி) ஓர் அறிக்கையைப் பெற்றது.

இதையடுத்து, நான்கு நபர்களும் விரைந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சீனாவில் வுஹான் நகரில் இந்த புதிய வகை கொரொனாவைரஸ் பரவத் தொடங்கியது. உலக சுகாதார அமைப்பு இது ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் என்பதை உறுதிப்படுத்தியது.

பெய்ஜிங், ஷாங்காய், குவாங்டாங் மற்றும் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் அமெரிக்கா உட்பட வுஹான் நகருக்கு வெளியே இந்நோய் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி 830 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...