24 C
Malaysia
Friday, February 28, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் அரசியல் “மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை!”- இந்திய மத்திய வணிக அமைச்சர்

“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை!”- இந்திய மத்திய வணிக அமைச்சர்

புது டில்லி: மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தை இந்திய மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்துள்ளார்.

“மலேசியா அல்லது துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நாங்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவ்வாறு செய்வதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை” என்று நேற்று புது டில்லியில் ‘ரைசினா உரையாடலில்‘ பேசியபோது அவர் கூறினார்.

காஷ்மீர் பிரச்சனையில் அவர்களின் நிலைப்பாட்டின் காரணமாக மலேசியா மற்றும் துருக்கியிலிருந்து இறக்குமதியை தடை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்கள் கூறுவதாக மேற்கோள் காட்டி வந்த ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

துருக்கிக்கு வணிக பற்றாக்குறை உள்ள நிலையில், மலேசியா, இந்தியாவுடன் வணிக உபரியை அனுபவிக்கிறது.

மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதியாளர்களை அதிகம் பாதிக்கக்கூடிய நடவடிக்கையான, சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெயை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதை இந்தியா தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

மலேசியாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கோயால் தெரிவித்தார்.

“நாங்கள் விதிக்கும் எந்தவொரு தடையும் அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...