23 C
Malaysia
Sunday, February 16, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் மலேசியா மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலமாக அக்குழந்தை புதிய வரலாறு படைத்துள்ளார்.

குழந்தை, ஹாரிஸ் நாட்ஸிம் முகமட் ஹில்மி நாயிம், ஸ்டான்போர்ட் பினெட் (Stanford Binet) சோதனையின் மூலம் 142 நுண்ணறிவு (ஐக்யூ) மதிப்பெண் பெற்ற பின்னர் இச்சங்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.

உலகெங்கிலும் உள்ள மேதை குழந்தைகளின் மதிப்பெண்கள் 0.3 விழுக்காடு என்று மெட்ரோ யுகே தெரிவித்துள்ளது.

ஹாரிஸின் பெற்றோர்களான அனிரா அசிகின் மற்றும் முகமட் ஹில்மி நாயிம் இருவரும் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். தங்கள் மகனுக்கு அசாதாரணமான நுண்ணறிவு இருப்பதாக ஒருபோதும் நினைத்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் அவரை ஒரு தினப்பராமரிப்பு மையத்திற்கு அனுப்பியபோது, ​​மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது எங்கள் குழந்தை அசாதாரண திறன்களைக் காட்டியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.”

“ஹாரிஸ் தனது எல்லா புத்தகங்களையும் சரளமாக படிக்க முடியும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவரது தாயார் கூறினார்.

இந்ததிறனைஉணர்ந்தஹாரிஸை,பின்னர்லின்கெண்டல்என்றஉளவியலாளரிடம்அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.

“அவர் திறமையான குழந்தைகளின் திறனைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவர்.”

தனது மகனின் உண்மையான திறனை அடைய ஆதரவளிக்க விரும்புவதாக அனிரா விளக்கினார்.

“எங்கள் குழந்தை அவரது முழு திறனை அடைந்து, அவர் ஈடுபடும் துறையில் தொடர்ந்து வளர்ச்சியை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“அதே நேரத்தில், அவர் மீது அதிக சுமையை வைக்க நாங்கள் விரும்பவில்லை. மற்ற சாதாரண குழந்தைகளைப் போல வளர்ந்து வரும் அனுபவத்தை அவர் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அனிரா கூறினார்.

மற்ற குழந்தைகளுக்கு ஊக்கமளிப்பற்காக, ஹாரிஸுக்கு இரண்டு வயதாக இருந்தபோது, ​​அவரும் அவரது கணவரும் ‘லிட்டில் ஹாரிஸ்’ என்ற யூடியூப் அலைவரிசையைத் திறந்ததாக அனிரா கூறினார்.

“அவர் மற்ற மூன்று வயது குழந்தைகளைப் போலவே இருக்கிறார். அவர் விளையாடுவதற்கும், வரைவதற்கும், பாடுவதற்கும் விரும்புகிறார், ”என்று அவரது தாயார் விளக்குகினார்.

உண்மையில், அனிரா தனது மகனும் ஸ்டோரி போட்ஸ் (Story Bots) மற்றும் நம்பர் பிளாக்ஸ் (Numberblocks) போன்ற குழந்தைகள் நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறினார்.

தனது மகனுக்கு கேள்விகளைக் கேட்பதும், இடத்தைப் பற்றி பேசுவதும், புத்தகங்களைப் படிப்பதும் பிடிக்கும் என்று அனிரா மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...