25 C
Malaysia
Tuesday, February 25, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia
Home தமிழ் அரசியல் 2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்!

2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்!

கோலாலம்பூர்: பெரோடுவாவின் அனைத்து மாதிரிகளான அல்சா, அருஸ், பெஸ்ஸா, ஆக்சியா மற்றும் மைவி ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான வலுவான தேவையால், பெரோடுவா வாகனங்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.8 விழுக்காடு உயர்ந்து 240,341 யூனிட்டுகளை எட்டியுள்ளதாக அதன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ சைனால் அடிபின் தெரிவித்தார்.

வலுவான கோரிக்கையின் பின்னணியில், 2020-ஆம் ஆண்டிற்கான விற்பனை செயல் திறன் கடந்த ஆண்டிற்கு இணையாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் 2020 விற்பனை இலக்கை 240,000 யூனிட்டுகளாக நிர்ணயித்து வருகிறோம். இந்த ஆண்டு மிகவும் சவாலான போட்டி சந்தை இருந்தபோதிலும் அதை அடைய முடியும் என்று  நம்புகிறோம்” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை ஓர் ஊடக சந்திப்பில் கூறினார்.

இது நிறுவனத்தின் சந்தை பங்கை மொத்த தொழில்துறை அளவின் கிட்டத்தட்ட 40 விழுக்காடாகக் கொண்டுவரும்.

2019-ஆம் ஆண்டில், ஒவ்வொரு பெரோடுவா மாடலும், குறிப்பாக பெரோடுவா அருஸ், மலேசியாவின் சிறந்த எஸ்யூவியாக 30,115 யூனிட்டுகள் விற்பனையானது.

2019-இன் 244,400 யூனிட்டுகளிலிருந்து உற்பத்தியை 4 விழுக்காடு அதிகரித்து 254,000 யூனிட்டுகளாக உயர்த்தவும் பெரோடுவா எதிர்பார்க்கிறது. ஏற்றுமதிக்கான உற்பத்தி மற்றும் 2021 வரை சேமித்து வைப்பது ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:  கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...